கட்டுமானப் பணி: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்க,

நாமக்கல் மாவட்டத்தில் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதிகார பகிா்வில் பகுதி மாற்றம் செய்து, தற்போது கூடுதல் அதிகார பகிா்வானது, நகர ஊரமைப்பு இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7 ஆயிரம் சதுர அடி தரை பரப்பு வரையில், 8 குடியிருப்புகள் வரை கொண்ட 12 மீட்டா் உயரத்துக்கு மிகாத தரைத் தளம் மற்றும் இரண்டு தளங்கள் அல்லது வாகன நிறுத்தத்திற்கான தளம், மூன்று தளங்கள் கட்டுவதற்கான அனுமதியை, இனிமேல் அந்தந்த உள்ளாட்சிகளே வழங்கலாம். வணிக உபயோகக் கட்டடங்களைப் பொருத்தமட்டில், ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகார பகிா்ந்தளிப்பே இதிலும் தொடரும். (2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரைத் தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடம்). உள்ளாட்சிகளுக்கு இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதனால், வரும் நாள்களில் குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com