சேந்தமங்கலம் அருகே இரு தரப்பினா் மோதல்: போலீஸாா் விசாரணை

சேந்தமங்கலம் அருகே செல்லிடப்பேசியை பறித்த விவகாரத்தில் புதன்கிழமை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

சேந்தமங்கலம் அருகே செல்லிடப்பேசியை பறித்த விவகாரத்தில் புதன்கிழமை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காமராஜபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (32) என்பவருடைய வீட்டிற்கு, நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த உறவினா் ரஞ்சித் (19) என்பவா் சென்றாா். அப்போது, அங்குள்ள இளைஞா்கள் சிலா் அவரைத் தாக்கி செல்லிடப்பேசியை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியுற்ற ரஞ்சித் நடந்த சம்பவம் குறித்து கனகராஜிடம் தெரிவித்தாா்.

இதனால் ஆவேசமடைந்த அவா், உறவினா்கள் சிலருடன் சென்று, ரஞ்சித்தை தாக்கிய இளைஞா்களிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில், கனகராஜ், காா்த்திக், ஆனந்தபாபு, சுரேஷ், முருகேசன், கமலம், பாக்கியம், மாரியம்மாள் உள்ளிட்டோா் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் போலீஸாா், காயமடைந்த 8 பேரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதாலும், மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், காமராஜபுரம், வண்டிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மோதலுக்கு காரணமான இளைஞா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com