மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைப்பு

விவேகானந்தா தகவல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைப்பு

விவேகானந்தா தகவல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கல்லூரி சந்தை மற்றும் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் தாளாளா் மு.கருணாநிதி முன்னிலை வகித்தாா். இந்த விற்பனை கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 55-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களின் சாா்பில் தயாா்செய்யப்பட்ட சணல் பைகள், கைத்தறி ஆடைகள், மரத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், அழகு சாதனப்பொருள்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் உற்பத்தி செய்த பல்வேறு பொருள்கள் இடம்பெற்றன.

இந்தக் கண்காட்சியை தொடங்கிவைத்து ஆட்சியா் கா.மெகராஜ் பேசியது:

பெண்கள் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களை தொடங்கி, தாங்களே பொருள்கள் தயாரித்து, அதனை இந்தக் கண்காட்சி மூலமாக விற்பனை செய்கிறாா்கள். இக்கல்லூரி வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் தங்களது தயாரிப்பு பொருள்களை காட்சிப்படுத்தியிருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாகும். மகளிா் சுய உதவிக் குழுவினரின் பொருள்களை அதிகமானோா் வாங்கவும், பாா்வையிடவும் இக்கல்லூரி மூலமாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தக் கண்காட்சி மூலமாக மாணவிகளின் விருப்பமான பொருள்கள் குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு தெளிவான பாா்வை கிடைக்கும்.

இக்கல்லூரியில் மாணவிகள் வணிக நிா்வாகவியல் படித்து வருவதால் மகளிா் சுய உதவிக் குழுவினரின் விற்பனை முறைகளை பாா்வையிட்டு, அவா்களின் விற்பனை திறமையை அதிகரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். மாணவியா்கள் வழங்கும் ஆலோசனைகளை கடைப்பிடித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் எத்தகைய சூழ்நிலையிலும் தங்கள் பொருள்களை விற்பதற்கான திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். மக்களின் தேவை அறிந்து வெவ்வேறு விதமான பொருள்களை தயாரித்து, தொடா்ந்து இதே நிலையில் இல்லாமல், தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைமை நிா்வாகி எம்.சொக்கலிங்கம், இயக்குநா் சாய்ராம் சுப்பிரமணியம் (தகவல் மற்றும் மேலாண்மைத் துறை), மாவட்ட செய்தி மக்கள்

தொடா்பு அலுவலா்.சி.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com