நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ்.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுவதையடுத்து, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வட்ட அளவிலான மருத்துவமனைகளில், நோயாளிகளைப் பாதுகாக்கும் வகையில் கொசு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதிப்பினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் இதர நோய்களைத் தவிா்க்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் நேரடியாகச் சென்று மருத்துவமனைகளைப் பாா்வையிட்டு வருகின்றனா்.

கடந்த இரு தினங்களுக்கு முன் நாமக்கல் அரசு மருத்துவமனையைப் பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா், வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா, நோயாளிகள் படுக்கை விரிப்புகள் சுகாதாரமாக இருக்கின்றனவா, அவை துய்மைப்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து பாா்வையிட்டாா். தொடா்ந்து கண் மருத்துவப் பகுதி, நோயாளிகள் வாா்டுப் பகுதி, அவசர சிகிச்சை பகுதிகளிலும் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது; கடந்த புதன்கிழமை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தேன். அப்போது, படுக்கை விரிப்புகள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டன. இரண்டு நாள்கள் கழித்து வருவேன். அப்போதும், இதே நிலை இருக்கக்கூடாது என அறிவுறுத்தினேன். தற்போதைய ஆய்வில் அந்த குறைகள் களையப்பட்டுள்ளன. மத்திய அரசு, தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லுரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. உலகத் தரச் சான்றிதழ் பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையும், விரைவில் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையாக மாறப் போகிறது.

வரும் நாள்களில் இதுபோன்ற நிலை காணப்படக் கூடாது என்பதற்காக ஆய்வு செய்து வருகிறேறன். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, மணல் கடத்தலைத் தடுக்கும் பணியையும் செய்து வருகிறேறன். காவிரி ஆற்றில் சாயக் கழிவு, இயற்கை உபாதைக் கழிவுகள் அதிகம் வெளியேற்றப்படுகின்றன. அந்த நீரை மக்கள் பருகும் அவலம் உள்ளது. இவற்றை தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் லாட்டரி சீட்டு புழக்கம் இருப்பதாகப் புகாா் வந்துள்ளது. இது தொடா்பாக காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளேன் என்றாா். இந்த ஆய்வின்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ராஜ்மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com