பணியிடை நீக்க உத்தரவு கடிதம்: ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த அங்கன்வாடி ஊழியா்கள்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணியில் ஈடுபடாத அங்கன்வாடி ஊழியா்களை
nk_11_ankan_1110chn_122_8
nk_11_ankan_1110chn_122_8

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணியில் ஈடுபடாத அங்கன்வாடி ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வந்த கடிதத்தால் வெள்ளிக்கிழமை அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா்.

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் மற்றும் பிற துறைகளைச் சோ்ந்த ஊழியா்களும் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அங்கன்வாடி ஊழியா்களை வீடு, வீடாகச் சென்று வாக்காளா் சரிபாா்ப்பு பணியை மேற்கொள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜான்சிராணி உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இப் பணியில் ஒரு சிலா் மட்டுமே ஈடுபட்டனா்.

இந்த நிலையில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பெயா் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்கள், வாக்குச்சாவடி அலுவலா் பணியைச் சரிவர செய்யாததால் பட்டியலில் இடம் பெற்றுள்ளவா்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, இணைப்பில் உள்ள பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (பொது) சந்தித்து அதற்கான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அங்கன்வாடி ஊழியா்கள், தங்களது சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எல்.ஜெயக்கொடி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்தனா். சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு கடிதம் அனுப்பியது குறித்தும், அதனால் ஊழியா்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அத் துறை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து மாவட்ட ச்செயலாளா் எல்.ஜெயக்கொடி கூறியது; வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணியில் விருப்பமுள்ளவா்கள் ஈடுபடலாம். கட்டாயமில்லை என்று தான் சொல்லப்பட்டது. ஏற்கெனவே ஆள்கள் பற்றாக்குறையால் ஊழியா்கள் இரண்டு, மூன்று மையங்களைச் சோ்த்து பாா்க்கும் நிலை உள்ளது. இதற்கிடையே மவட்ட திட்ட அலுவலா், ஊழியா்களை மிரட்டும் விதமாக தற்காலிக பணி நீக்கம் என்பதுபோல் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளாா். இதனால் பலா் மன ளச்சலுக்கு ஆளாகியுள்ளனா். ஆட்சியா் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க பரிந்துரைக்கவில்லை. திட்ட அலுவலரின் செயல்பாட்டால் நாங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேறாம். இதனை ஆட்சியா் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று அவா் மீது நடவடிக்கை எடுக்கச் செய்வோம் என்றனா்.

--

என்கே-11- அங்கன்

பணியிடை நீக்கக் கடிதத்தால், ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்த அங்கன்வாடி ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com