பரமத்தி ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கோளாரம் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். இந்த ஆய்வில் குடிநீா் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடிவைக்கவும், டெங்கு நோயை பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்கள் நல்ல நீரில் மட்டும் வளரும் என்பதால் ஆட்டுக்கல், டயா்கள், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட பொருள்களில் மழை நீா் மற்றும் நல்ல நீா் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

பின்னா் வாவிபாளையம் கிராமத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கோளாரம் ஊராட்சி, கரச்சிப்பாளையம் கிராமத்தில் முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூா்வாரும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும் அதே பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணற்றின் கைப்பம்பை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com