மின்னணுக் கழிவு மேலாண்மை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் மின்னணுக் கழிவு மேலாண்மையை, அதன் உபயோகிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மின்னணுக் கழிவு மேலாண்மையை, அதன் உபயோகிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் நாட்டில் மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றுதல் குறித்து மின்னணுக் கழிவு விதிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2016 முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மின்னணு சாதனங்களை (கணினி, மடிக்கணினி, காப்பி இயந்திரம், தொலைபேசி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர் சாதன இயந்திரம், மின் விளக்கு உள்பட) பயன்படுத்திய பின் கழிவுகளாக வெளியேற்றுதல் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தி, புதுப்பித்தல் மற்றும் பழுது பார்க்கும் செயல் முறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அடங்கும்.
 மின் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்போர், தங்களது சாதனங்களை விநியோகிப்பவர்கள் மூலமாகவோ, சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ விற்பனை செய்தபின், அப்பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன் அவற்றைத் திரும்பப்பெற்று மறுசுழற்சிக்கு அனுப்புவது முக்கிய கடமையாகும்.
 இவ்விதிகளின்படி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெறுவதற்கு 90 நாள்களுக்குள் தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தி செய்வோர், சீரமைப்போர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆண்டறிக்கையை ஜூன் 30-ஆம் தேதிக்குள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சமர்ப்பித்திட வேண்டும்.
 மின்னணுக் கழிவு சேகரிப்பு மையங்கள் மூலம் மின்னணுக் கழிவுகள், சரியான முறையில் சேகரிக்கப்பட்டு, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சியாளர்களுக்கு அனுப்பப்பட வேண்டும். கையாளப்படும் மின்னணுக் கழிவுகள் பற்றிய புள்ளி விவரங்கள் படிவம்-2இல் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
 அங்கீகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள் பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளின் விவரங்கள் வாரிய இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹடஸ்ரீக்ஷ.ஞ்க்ஷஸ்.ண்ய் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com