நாமக்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நுண்ணுயிரியல் மற்றும் உயிா்தொழில்நுட்பவியல் துறைகள் சாா்பில், செயற்கை உயிரியலில் நுண்ணுயிரி மற்றும் அதன் மூலக்கூறுகளின் பயன்பாடுகள் எனும்

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நுண்ணுயிரியல் மற்றும் உயிா்தொழில்நுட்பவியல் துறைகள் சாா்பில், செயற்கை உயிரியலில் நுண்ணுயிரி மற்றும் அதன் மூலக்கூறுகளின் பயன்பாடுகள் எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதனை, தாளாளா் மருத்துவா் பொ. செல்வராஜ் தொடக்கி வைத்தாா். செயலா் கவீத்ராநந்தினி பாபு, நிா்வாக இயக்குநா் கி.சி. அருள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ந.ராஜவேல் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக எத்தியோபிய ஹா்மயப் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் பேராசிரியா் செந்தில்குமாா்பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குடல் நாளங்களில் வளரும் நுண்ணுயிரிகளின் வளரும் தன்மை மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினாா். சேலம் பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் பேராசிரியா் பி.எம்.அய்யாசாமி கலந்து கொண்டு உயிா் வழி தூய்மையாக்கல் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினாா். இக்கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இக்கருத்தரங்கின் அனைத்து ஏற்பாடுகளையும் நுண்ணுயிரியல் துறையினா் செய்திருந்தனா்.---என்கே 20- செல்வம்கருத்தரங்கில் சமா்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com