அக்.2இல் கிராம சபைக் கூட்டம்

322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாவட்டஆட்சியா் கே.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாவட்டஆட்சியா் கே.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.மெகராஜ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜயந்தி தினமான அக்.2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், நீா் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்கம், குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்படும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களை தடுப்பது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், நெகிழிப் பொருள்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை தடை செய்தல், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுடன் அதிகாரிகள் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com