தூசூர் ஏரி சீரமைப்புக்காக ரூ.2 லட்சம் நிதி அளிப்பு

தூசூர் ஏரி சீரமைப்பு பணிக்காக, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர், தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் வழங்கினார். 


தூசூர் ஏரி சீரமைப்பு பணிக்காக, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர், தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் வழங்கினார். 
நாமக்கல் மாவட்டம், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் புதிய கட்டடங்கள், குடிநீர்த் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, புதிய நியாய விலைக் கட்டடங்கள், குடிநீர்த் தொட்டியினை திறந்து வைத்தார். இதில், மோகனூர் ஒன்றியம், மணப்பள்ளி ஊராட்சி குன்னிப்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக்கடை, என்.புதுப்பட்டி ஊராட்சி ஜங்களாபுரம் கிராமத்தில்  ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம்  பெருமாப்பட்டியில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடம், கொடிக்கால்புதூரில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடம் திறக்கப்பட்டது.
கொடிக்கால் புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், பொம்ம சமுத்திரத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ.4.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, முத்துகாப்பட்டியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.9.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, முத்துகாப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தூசூர் ஏரியில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீமைகருவேல முள் அகற்றும் பணிக்காக, சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.சந்திரசேகரன் தனது தொகுதி நிதியில் இருந்து வழங்கிய ரூ.2 லட்சத்தை அமைச்சர் பி.தங்கமணி, ஆட்சியர் கா.மெகராஜிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com