வெறிநோய் தடுப்பூசி முகாம்

பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரை பேரூராட்சிக்குள்பட்ட கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 94 நாய்களுக்கு வெறிநோய்


பரமத்தி வேலூர் வட்டம், வெங்கரை பேரூராட்சிக்குள்பட்ட கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 94 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் கால்நடை பராமரிப்புத் துறை, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் இணைந்து உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வெங்கரையில் வெறிநோய் தடுப்பூசி முகாமை நடத்தினர்.
வெங்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயகுமார் முகாமை தொடக்கி வைத்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவர் செல்வராஜ், மருத்துவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் வெங்கரை, சேளூர், கொந்தளம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அழைத்து வந்திருந்த 94 நாய்களுக்கு மருத்துவர் மணிவேல், பேராசிரியர் ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மூலம் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே வெறிநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com