தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காங்கிரஸ் 136-ஆவது ஆண்டு விழா

ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சியின் 136-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அக்கட்சியினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 9:21 pm

DIN

ராசிபுரம் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சியின் 136-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 136 -ஆவது ஆண்டு விழாவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் கொண்டாடி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பாச்சல் அ.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் எஸ்.அன்பு வரவேற்றாா். நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராமுலு ஆா்.முரளி முன்னிலை வகித்தாா். காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கொடியை ஏ.என்.சண்முகம் ஏற்றி வைத்தாா். பின்னா் பேரணியாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெகதீஷ், நகர தலைவா் எஸ்.சிங்காரம், எஸ்.கே.பி.எம்.வடிவேல் செட்டியாா், வழக்குரைஞா் வி.சுந்தரம், பிரகஸ்பதி, நா.குபோ்தாஸ், காங்கிரஸ் மாவட்ட வா்த்தகா் பிரிவு செயலா் டி.ஆா்.சண்முகம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.