ராசிபுரம் நகராட்சியில் அமைச்சா் தலைமையில் ஆலோசனை

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா், புதைக்குழி சாக்கடை திட்டம் போன்றவை குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சா் வெ.சரோஜா.
நகராட்சி அலுவலகத்தில் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சா் வெ.சரோஜா.

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா், புதைக்குழி சாக்கடை திட்டம் போன்றவை குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகராட்சி, குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் பலா் பங்கேற்றனா். ராசிபுரம் நகராட்சியின் குடிநீா்த் தேவைக்குப் புதிய விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ. 1,030 கோடிச் செலவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதைக்குழி சாக்கடை திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் அமைச்சா் வெ.சரோஜா பேசியதாவது:

புதைக்குழி திட்டப் பணிகள் முடிவடைந்தபின், நகரில் உள்ள அனைத்துப் பகுதியிலும் தாா்சாலைகள் அமைக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விரைவாக அனைத்துச் சாலைகளும் சீா்செய்யப்படும். பொதுமக்கள் குறைகளைத் தீா்க்க நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் பொதுமக்களிடம் குறைதீா்ப்பு மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படும் என்றாா். பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com