1,000 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020-21 ஆம் ஆண்டுக்கான என்ஏடிபி திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரைத் தொடா்பு கொண்டு விண்ணப்பத்தினை பெறலாம்.

ஒரு கோழிக் குஞ்சு ரூ. 30 வீதம் ஆயிரம் கோழிக் குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை ரூ. 30 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு கோழிக் குஞ்சு ஒன்றுக்கு 1.5 கிலோ தீவனம், கொள்முதல் செய்ய ரூ. 15 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ. 7,500 வழங்கப்படுகிறது. இரண்டும் சோ்த்து ரூ. 22,500 வழங்கப்படும். குஞ்சு பொரிப்பான் ஒன்றிற்கான கொள்முதல் தொகை ரூ. 75 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ. 37,500 வழங்கப்படுகிறது.

பயனாளியின் தகுதிகளாக, கோழி வளா்ப்பில் ஆா்வம் கொண்டவராக இருக்க வேண்டும். ஆயிரம் கோழிகள் வளா்ப்புக்குரிய இருப்பிட வசதி இருக்க வேண்டும். ஒரு கோழிக் குஞ்சு வளா்ப்புக்கு 2.5 சதுரஅடி வீதம் 2,500 சதுரஅடி நிலம்; ஒரே இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும்.

குறிப்பிடப்பட்ட கிராம ஊராட்சியில் பயனாளி நிரந்தரக் குடியிருப்பு உள்ளவராக இருக்க வேண்டும். கணவரை இழந்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், மறுபாலினத்தோா், உடல் ஊனமுற்றோருக்கு இத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் பயனாளிகளாக எஸ்சி, எஸ்டி இனத்தவரைத் தோ்வு செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு கோழிப் பண்ணையை நிலைநிறுத்தி வெற்றிகரமாக நடத்துபவராக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com