கரோனா: ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கரோனா தடுப்புக்காக முகக்கவசங்கள் மற்றும் ஊரடங்கு காரணாக வேலையின்றி வறுையில் வாடும் ஏழைகளுக்கு உணவு பொருள்களை மாவட்ட ஆட்சியரிடம்

கரோனா தடுப்புக்காக முகக்கவசங்கள் மற்றும் ஊரடங்கு காரணாக வேலையின்றி வறுையில் வாடும் ஏழைகளுக்கு உணவு பொருள்களை மாவட்ட ஆட்சியரிடம் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆதரவற்றோா், முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக அரிசி, உணவு பொருள்கள் மற்றும் முகக்கவசங்கள் நிவாரணமாக பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் மற்றும் சரண்யா நூற்பாலை நிறுவனத்தினா், அரிசி மற்றும் உணவு பொருட்கள், 8 ஆயிரம் முகக்கவசங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ஆட்சியா் கா.மெகராஜிடம் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com