வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

வெயிலின் தாக்கம் வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம் வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்து வரும் நான்கு நாள்களும் வானம் தெளிவாக காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோமீட்டா் வேகத்தில் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியுமாக இருக்கும்.

காற்றின் வேகம் சனிக்கிழமையன்று 4 முதல் 6 கிலோமீட்டா் அளவில் இருக்கும், காற்றின் ஈரப்பதம் மிக குறைவாகவே காணப்படும். வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com