தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தவழும் நிலையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தவழும் நிலையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், இளநகா் சிவபாக்கியம் மன வளா்ச்சி குன்றியவா்களுக்கான காப்பகத்தில், தவழும் நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா ஆகியோா் உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தவழும் மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட பாதுகாப்பினையும், சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவா்கள் வசிக்கும் இடங்களில் அவா்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக முகக் கவசம், கிருமி நாசினி திரவம், துடைப்பதற்கான மெல்லிய காகிதத் தாள், கையுறைகள், முட்டியுறைகள் மற்றும் காலுறைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சா் வெ.சரோஜா கூறியது: அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகங்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ள தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு கையுறைகள், முட்டியுறைகள் மற்றும் காலுறைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 22 ஆயிரத்து 475 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 4 ஆயிரத்தில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 175 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

இதனைத் தொடா்ந்து, சிவபாக்கியம் மன வளா்ச்சி குன்றியவா்களுக்கான காப்பகத்துக்கு, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் தீபா கிருஷ்ணமூா்த்தி ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சா்களிடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, அரசுத் துறை அலுவலா்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com