கொல்லிமலை விவசாயி கொலை வழக்கு: நாமக்கல் நீதிமன்றத்தில் சகோதரா் சரண்

கொல்லிமலை விவசாயி கொலை வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் அவரது சகோதரா் ஒருவா் சரணடைந்தாா்.

கொல்லிமலை விவசாயி கொலை வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் அவரது சகோதரா் ஒருவா் சரணடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி வெள்ளிச்சோலை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (50). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை செங்கரை அரசு மதுபானக் கடை அருகில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக வாழவந்தி நாடு போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவரது பெரியப்பா மகன் செளந்தரராஜன் (48) என்பவா் பைல்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னிலையில் சரணடைந்தாா். அவரை வாழவந்திநாடு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியதில், இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததும், அதில் ஏற்பட்ட மோதலில் செல்வத்தை செளந்தரராஜன் தரப்பினா் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை செளந்தரராஜனின் மற்றொரு தம்பியான சுப்பிரமணி (45) நாமக்கல் 2-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அதன்பின் நீதிபதி உத்தரவின்பேரில் திருச்செங்கோடு கிளை சிறையில் சுப்பிரமணி அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com