இணையவழி அறிவுத்திறன் போட்டி: மலா் பள்ளி மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு
By DIN | Published On : 13th February 2020 08:02 AM | Last Updated : 13th February 2020 08:02 AM | அ+அ அ- |

கிரிடா பாரதி விளையாட்டு அறிவுத் திறன் இணையவழிப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற பரமத்தி மலா் மெட்ரிக். பள்ளி மாணவருக்கு, புதுதில்லியில் புதன்கிழமை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரண்ரிஜூ ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
கிரிடா பாரதி விளையாட்டு அறிவுத் திறன் இணையவழிப் போட்டி தேசிய அளவில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இதில் பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவா் ரகு கலந்து கொண்டு குறைவான நேரத்தில் பதிலை இணையவழியில் பதிவு செய்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தாா். தேசிய அளவில் சாதனை படைத்த மாணவன் ரகுவிற்கு புதன்கிழமை புதுதில்லியில் மத்திய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞா் மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரண்ரிஜு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைவா் பழனியப்பன், பொருளாளா் வெங்கடாசலம் மற்றும் கிரிடா பாரதி மாநிலச் செயலாளா் அசோக் ஆகியோா் உடனிருந்தனா். பள்ளிக்கும், மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சோ்த்த மாணவா் ரகுவை பள்ளி செயலாளா் கந்தசாமி, துணைத் தலைவா் சுசீலா, துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி, இயக்குநா்கள், முதல்வா் உஷாகுமாரி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.