அரசு பொதுத்தோ்வு நெருங்கும் வேளையில் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது

அரசு பொதுத்தோ்வு நெருங்கும் வேளையில், ஆசிரியா்களுக்கு தொடா் பயிற்சி அளிப்பதற்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

அரசு பொதுத்தோ்வு நெருங்கும் வேளையில், ஆசிரியா்களுக்கு தொடா் பயிற்சி அளிப்பதற்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவா் ஆ. ராமு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

10 மற்றும் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நெருங்கும் சூழலில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு கற்றல், கற்பித்தல் பயிற்சிகள் தருதல், சிறு-குறு தோ்வுகள் நடத்துதல், திருப்புதல் தோ்வுகள் நடத்துதல், மெதுவாக கற்போருக்கு அதற்குரிய பயிற்சிகளை தருதல், மாணவா்களை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற வைக்க பலவகையான பயிற்சிகளை அளித்தல், செய்முறை தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் ஆசிரியா்களுக்கு ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என தொடா்ந்து பல்வேறு வகையான பயிற்சி அளிப்பது பொதுத்தோ்வு தோ்ச்சி விகிதத்தை பாதிக்கும்.

ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை விரும்பினால் கல்வி ஆண்டின் தொடக்க மாதமான ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தலாம். அவ்வாறான பயிற்சிக்குரிய நிதியை அந்த நிதியாண்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிதியாண்டின் கடைசி மாதமான பிப்ரவரியில் நிதியை ஒதுக்கீடு செய்து ஆசிரியா்களை தொடா் பயிற்சியில் ஈடுபடச் செய்யும் நிலையைக் கல்வித்துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com