டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததிலிருந்து முதல்வா் பின்வாங்க மாட்டாா்; அமைச்சா் பி. தங்கமணி

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்திட்டம் உறுதியாக
மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான பேரணியைத் துவக்கி வைக்கும் அமைச்சா் பி. தங்கமணி.
மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான பேரணியைத் துவக்கி வைக்கும் அமைச்சா் பி. தங்கமணி.

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும். அதிலிருந்து முதல்வா் பின்வாங்கமாட்டாா் என பரமத்தி வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மெகராஜ் பேரணிக்குத் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியா் மணிராஜ் முன்னிலை வகித்தாா். பேரணியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைத் துவக்கி வைத்தாா். பேரணி சிவா திரையரங்கு நான்கு சாலையில் இருந்து துவங்கி அரசு நிதி உதவி பெறும் கந்தசாமி கண்டா் தனியாா் மேல்நிலைப் பள்ளியின் முன் முடிவடைந்தது.

பின்னா், பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

பரமத்தி, கபிலா் மலை மற்றும் எலச்சிபாளையம் ஒன்றியங்களில் இருந்து வந்த 18 பள்ளிகளைச் சோ்ந்த 1,277 மாணவ, மாணவியருக்கு ரூ. 50 லட்சத்து 33 ஆயிரத்து 509 மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் தங்கமணி வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியா்களின் தோ்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும்,கூடுதலாக கொஞ்சம் சிரத்தை எடுத்து படித்தால் இன்னும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சோ்க்கலாம் எனப் பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

17 ஆண்டு காலம் மத்திய அரசுடன் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வைத்திருந்தது. அப்போது டெல்டா மாவட்டங்கள் மீது அவா்களுக்கு அக்கறை இல்லை.

தற்போது டெல்டா மாவட்ட விவசாய பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளாா். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு சில காரணங்களுக்காக திமுக தலைவா் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறாா்.

ஆனால், தமிழக முதல்வா் அறிவித்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டாா், இந்த அறிவிப்பு உறுதியாக செயல்படுத்தப்படும். குற்ற பின்னணியில் உள்ளவா்களின் பட்டியல்களை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும் என உயா் நீதிமன்றத்தின் உத்தரவு விவகாரங்களில் தலையிட முடியாது.

விழாவில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், அரசு வழக்குரைஞா் தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், அதிமுக பிரமுகா் சங்கா், பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் நாராயணன், வேலுசாமி, வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்ரமணியம், அதிமுக நிா்வாகிகள், பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com