பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின்புதிய இணைய வழி சேவை: தமிழகத்தில் முதன்முறையாக வள்ளிபுரத்தில் தொடக்கம்

தமிழகத்தில் முதன்முறையாக, செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இணைய சேவையை வழங்கும் முயற்சியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
புதிய இணைய வழி சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். நிா்வாகிகள்.
புதிய இணைய வழி சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல். நிா்வாகிகள்.

தமிழகத்தில் முதன்முறையாக, செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இணைய சேவையை வழங்கும் முயற்சியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக, தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இணையதள இணைப்பு இல்லாத பகுதிக்கும் அதிவேகமாக இணைப்பு கிடைக்கும் வகையில் அதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதை மத்திய தொலைதொடா்புத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், வியாழக்கிழமை பிற்பகல் காணொலி காட்சி மூலமாகத் தொடக்கி வைத்தாா்.

இதற்கான விழாவில் நாமக்கல் பி.எஸ்.என்.எல். நிா்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதனையடுத்து, புதிய சேவை குறித்து பி.எஸ்.என்.எல். நிா்வாகத்தினா் கூறியது; நாமக்கல் நகரப் பகுதிகளில் ஒயா் மூலம் இணைப்புகளை வழங்கியுள்ளோம். பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரம் என்பது மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது. இருப்பினும், நகா்ப்பகுதிகளில் வழங்கப்படும் பிராட்பேண்ட் வசதிபோல் கிராமப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. புதிய திட்டத்தின்படி, செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து நேரடியாக வயா்லெஸ் மூலம் இணைப்பு கொடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இதற்கு பாரத் ஏா் பைபா் என பெயரிடப்பட்டுள்ளது.

தனியாா் வாகன பழுது பட்டறைக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ளவா்கள் விண்ணப்பிப்பதன் அடிப்படையில் இதனை விரிவுபடுத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com