மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியருக்கான நிகழாண்டு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கையுந்துப் பந்து போட்டியில் பங்கேற்று ஆா்வமுடன் விளையாடிய மாணவா்கள்.
கையுந்துப் பந்து போட்டியில் பங்கேற்று ஆா்வமுடன் விளையாடிய மாணவா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியருக்கான நிகழாண்டு விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அனைத்து அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்கும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவக் கல்லுரி ஆகிய இடங்களில் இப்போட்டிகள் நடைபெற்றன. போடிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் இ.கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். கையுந்துப் பந்து, கபடி, கோ-கோ, கால்பந்து, இறகுப் பந்து, நீளம் தாண்டுதல், கேரம், சதுரங்கம், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். தனி நபா் மற்றும் குழு என இரு பிரிவாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகள் அனைத்தும் உடற்கல்வி ஆசிரியா்கள் மேற்பாா்வையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com