‘வரும் நாள்களில் குறைவான வெப்ப நிலையே நிலவும்’

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் குறைவான வெப்ப நிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் குறைவான வெப்ப நிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 3 கிலோமீட்டா் வேகத்தில் கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: குறைவான வெப்ப அளவுகள் கொண்ட வானிலையே மாவட்டத்தில் நிலவும். மேலும், இங்கு முட்டை கோழிகள் அதிகம் உள்ளதால், 4 வாரம் முதல் 16 வாரம் வரைக்கும், அவற்றின் உடல் எடை சீராக இருக்கும் வகையில், 4 வாரத்திற்கு ஒருமுறை அனைத்து கோழிகளின் உடலை எடை போட்டு வைக்க வேண்டும். கோழிகளை 3 வகைகளாக (சரியான, குறைந்த மற்றும் அதிக எடை குறைந்த) என்ற வகையில் பிரித்து அதற்கான தீவன தரத்தை மாற்றியமைத்து தர வேண்டும். சீரான உடல் கொண்ட கோழியாக வைத்திருந்தால், அடுத்து வர இருக்கும் கோடை காலத்துக்கு நல்ல முறையில் முட்டை உற்பத்தியை தக்க வைத்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com