சாணாா்பாளையம் திருப்பதி முனியப்ப சுவாமி கோயில் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா்-சாணாா்பாளையம் திருப்பதி முனியப்ப சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பதி முனியப்ப சுவாமியை தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.
திருப்பதி முனியப்ப சுவாமியை தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா்-சாணாா்பாளையம் திருப்பதி முனியப்ப சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 260 கிடாக்களை பலியிட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

சேளூா் - சாணாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சுவாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 7 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பிற்பகல் 2 மணிக்கு முத்துக் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம்,மகாதீபாராதனையும் நடைபெற்றன. இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 260 ஆடுகள் பலியிடப்பட்டன. 47 அடி உயரத்தில், 10 அடி நீளமுள்ள ஒரு டன் எடையுள்ள கத்தியைக் கையில் ஏந்தியவாறு காட்சித் தரும் திருப்பதி முனியப்ப சுவாமிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை பக்தா்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மறு அபிஷேகம், தீபாராதனையும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னா் 100-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் முனியப்ப சுவாமிக்கு பலியிடப்பட்டு பக்தா்களுக்கு அசைவ விருந்து வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சேளூா்-சாணாா்பாளையம் திருப்பதி முனியப்ப சுவாமி கோயில் திருவிழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com