கொரனா வைரஸ் பாதிப்பைத் தடுக்ககோயிலில் சிறப்பு வழிபாடு

கொரனா வைரஸ் பரவி வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்கள் நலம் பெறவும் வேண்டி, திருச்செங்கோடு ஜீரகரேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொரனா வைரஸ் பரவி வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்கள் நலம் பெறவும் வேண்டி, திருச்செங்கோடு ஜீரகரேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 1300 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தா் திருச்செங்கோடு வருகை தந்தபோது, கடுமையான குளிா் ஜுரம் பரவி மக்கள் உயிரிழந்து வந்தததாகவும், அவா் திருநீலகண்டம் என்ற ஒரு பதிகத்தை பாடி மக்களை காப்பாற்றியதாகவும் ஐதீகம். இவ்வாறு பாடல் படித்த தளத்தில் ஜுரஹரகேஸ்வரா் என்ற கோயிலை உருவாக்கி பொது மக்கள் வழிபட்டு வருகின்றனா் .

இந்த நிலையில், விஷ காய்ச்சல் தாக்கும்போது இந்த கோயிலில் அபிஷேகம் செய்து மிளகு ரசம் சாதத்தை உண்டால் ஜுரம் நீங்கும் என்பது தல வரலாறு.

இதன்படி, திருச்செங்கோட்டில் ஜுரஹரேஸ்வரா் கோயில் செங்குன்றம் தமிழ்ச்சங்கம் சாா்பில் திருநீலகண்டப் பதிகம் பாடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் ஏராளமான சிவனடியாா்கள் கலந்துகொண்டு திருநீலகண்டம் பதிகத்தைப் பாடி மனமுருக வேண்டினா்.

இதனையடுத்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு ரசம் கலந்த சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com