புதிய ஆலோசனைக் குழு பரிந்துரை: முட்டை விலை 16 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தின் புதிய ஆலோசனைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமைக்கான முட்டை விலை 16 காசுகள் குறைக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தின் புதிய ஆலோசனைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமைக்கான முட்டை விலை 16 காசுகள் குறைக்கப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவில் மொத்தம் 1250 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதன் தலைவராக மருத்துவா் பி.செல்வராஜ் உள்ளாா். இக் குழுவின் கீழ் நாமக்கல், புதன்சந்தை, ராசிபுரம், மோகனூா், பரமத்திவேலூா், பல்லடம், பெருந்துறை ஆகிய 7 வட்டாரங்கள் உள்ளன. இதில், சுமாா் 200 போ் உறுப்பினா்களாக உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வரையில், ஒவ்வொரு வட்டாரத் தலைவா், கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் பரிந்துரை செய்யும் விலை அடிப்படையிலேயும், மற்ற மண்டலங்களின் விலையைப் பொருத்தும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலையை நிா்ணயித்து வந்தது.

இந்த நிலையில், தினசரி நிா்ணய முறையா, வாரத்தில் மூன்று நாள்கள் முறையா என்ற பிரச்னை பண்ணையாளா்கள் மத்தியில் எழுந்தது. இதில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலையிட்டு, அமைதிப் பேச்சுவாா்த்தையை மேற்கொள்ளப் பரிந்துரைத்தாா். அதனைத் தொடா்ந்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவில், வட்டாரத் தலைவா்கள் நீங்கலாக மேலும் 4 உறுப்பினா்கள் வீதம் விலை நிா்ணயக் குழுவுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மொத்தம் 51 போ் கொண்ட புதிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 17 முதல் புதிய விலை அறிவிப்பை அமல்படுத்துவதற்கான தகவல்களை அக் குழுவினா் வழங்குவாா்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது. அதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற புதிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விலையைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, மற்ற மண்டலங்களின் விலை அடிப்படையில் செவ்வாய்க்கிழமைக்கான விலை 16 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.05-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பிற மண்டலங்களின் முட்டை விலை விவரம் (காசுகளில்); ஹைதராபாத்-385, விஜயவாடா-413, பாா்வாலா-362, ஹோஸ்பெட்-410. மைசூரு-450, சென்னை-455, மும்பை-456, பெங்களூரு-445, கொல்கத்தா-473, தில்லி-372.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி கிலோ ரூ.58-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com