போடிநாயக்கன்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு: அமைச்சா்கள் பங்கேற்பு

போடிநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

போடிநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், அலங்காநத்தம், சேந்தமங்கலம், பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, கரியபெருமாள்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இவற்றில், போடிநாயக்கன்பட்டியில் பல்வேறு பிரச்னைகளால் கடந்த 25-ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், நிகழாண்டில் போட்டியை நடத்துவதற்கு ஊா் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் ஏற்பாடுகளைச் செய்து வந்தனா். அதனைத் தொடா்ந்து, கடந்த 5-ஆம் தேதி மண்கரடு பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழா சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஏற்கெனவே, குமாரபாளையம், அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், போடிநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இதில், நாமக்கல், சேலம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த 450 காளைகள் பங்கேற்கின்றன. 300 வீரா்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப் போட்டியை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் தொடக்கி வைக்கின்றனா்.

விழாவையொட்டி, வாடிவாசல் அமைக்கும் பணிகளும், காளைகளைப் பிடிப்பதற்கான களத்தில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காளைகள் மற்றும் வீரா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள் என வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com