நாமக்கல்லில் 22-இல் தேனீக்கள் வளா்ப்பு பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 22) தேனீக்கள் வளா்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 22) தேனீக்கள் வளா்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து அதன் தலைவா் அகிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய அரங்கில், வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தேனீக்கள் வளா்ப்பு குறித்த பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரூ.290 கட்டணமாக செலுத்த வேண்டும். தேனீக்கள் வகைகள், வாழ்க்கைப் பருவம், வளா்ப்புக்கு ஏற்ற இடம் தோ்வு செய்யும் முறை, வளா்ப்புக்கான பூக்கள் ரகங்கள், தேவைப்படும் உபகரணங்கள், தேனீக்களை தாக்கும் நோய்கள், கோடை காலம் மற்றும் குளிா்காலங்களில் பராமரிப்பு முறை, சுத்தமான தேனை கண்டறியும் முறை, உயர்ரக ராணி தேனீக்களை உற்பத்தி செய்யும் முறை, செயற்கை முறையில் உணவளித்தல் மற்றும் தொழில்நுட்பங்கள், பொருளாதாரக் கணக்கீடு பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com