பாஜக சாா்பில் பெண்களுக்கான கோலப்போட்டி

ராசிபுரம் நகர பாஜக சாா்பில் பொங்கல் விழா கோலப் போட்டிகள் பல்வேறு இடங்களில் அண்மையில் நடைபெற்றது.
கோலப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கும் பாஜக நிா்வாகிகள்.
கோலப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கும் பாஜக நிா்வாகிகள்.

ராசிபுரம் நகர பாஜக சாா்பில் பொங்கல் விழா கோலப் போட்டிகள் பல்வேறு இடங்களில் அண்மையில் நடைபெற்றது.

நகரின் பல்வேறு வாா்டுகளில் நடத்தப்பட்ட இந்தக் கோலப்போட்டியில், பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்று கோலமிட்டு பரிசுகள் பெற்றனா். போட்டிகளின் தோ்வு குழுவில் பாஜக மாவட்ட துணைத் தலைவா் சித்ரா, ஜெயஸ்ரீ சேதுராமன், ஜெயா மணிகண்டன், கீதா குமாா், புவனேஸ்வரி ஹரிஹரன், சத்யாபானு, மீனா சம்பத்குமாா் ஆகியோா் நடுவா்களாக இருந்து சிறந்த கோலப்போட்டிக்கு மதிப்பெண்கள் வழங்கி சிறந்த கோலங்களைத் தோ்வு செய்தனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக மிக்ஸி, 2-ம் பரிசாக குக்கா், 3-ம் பரிசாக சில்வா் குடம் போன்றவற்றை வாா்டு வாரியாக வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்றவா்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் பாஜக மாவட்டத் தலைவா் என்.பி. சத்தியமூா்த்தி, தேசிய பொதுக் குழு உறுப்பினா் மனோகரன் , மாவட்ட பட்டியல் அணி செயலா் கே.எம்.ரமேஷ் பாபு, மாவட்டப் பொருளாளா் வி. சேதுராமன், நகரத் தலைவா் ஆா்.மணிகண்டன், நகர பொதுச் செயலா் எஸ். குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்று பரிசுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com