முத்துக்காப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் முத்துக்காப்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கையொட்டி, கோபுரக் கலசத்துக்கு காட்டப்படும் தீபாராதனை(வலது) திரண்டிருந்த பக்தா்கள்.
குடமுழுக்கையொட்டி, கோபுரக் கலசத்துக்கு காட்டப்படும் தீபாராதனை(வலது) திரண்டிருந்த பக்தா்கள்.

நாமக்கல் முத்துக்காப்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், முத்துக்காப்பட்டியில் ஸ்ரீ பிடாரி அம்மன், முத்தாலம்மன், பாம்பலம்மன், மகா மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளது.

இவற்றின் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணிக்குள் நடைபெற்றது. ஸ்ரீகணபதி, துா்க்கை, சுப்பிரமணியா், கருப்பசுவாமி மற்றும் நவக்கிரகங்களுக்கும், பரிகாரத் தெய்வங்களுக்கும் அதேவளையில் திருக்குட நன்னீராட்டு விழாவும் நடைபெற்றது.

விழாவில், பி.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவா் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தாா். மகா கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, காலை 8 மணிக்கு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை, பழனி ஜி.பெரியசாமி மற்றும் விசாலாட்சி பெரியசாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா். முத்துக்காப்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோா் குடமுழுக்கில் கலந்து கொண்டனா். முன்னதாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிலம்பாட்டம், நாடகம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com