மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல்
By DIN | Published On : 27th January 2020 07:11 AM | Last Updated : 27th January 2020 07:11 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் வட்டம்,பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை பரமத்தி வேலூா் போலீசாா் பறிமுதல் செய்து, ஆட்டோவின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெங்கரை பகுதியில் இருந்து பொத்தனூா் வழியாக சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வருவதாக பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல் துறை துணை கண்காணிப்பாளா் பழனிச்சாமி உத்தரவின்படி வேலூா் காவல்துறை ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீசாா் பொத்தனூா் மேற்கு வண்ணாந்துறை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
மணல் மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வெங்கரையைச் சோ்ந்த சரக்கு ஆட்டோ உரிமையாளா் தனபாலை (37) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.