நாமக்கல்லில் நியாயவிலைக் கடை மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு

நாமக்கல்லில் கரோனா பாதிப்பால் நியாயவிலைக் கடை திறக்கப்படாததால் மக்கள் பொருள்களை வாங்க முடியாமல் தவித்தனா்.
நாமக்கல் ராமாபுரம் புதூரில் கரோனா பாதிப்பால் பூட்டிக் கிடக்கும் நியாயவிலைக் கடை.
நாமக்கல் ராமாபுரம் புதூரில் கரோனா பாதிப்பால் பூட்டிக் கிடக்கும் நியாயவிலைக் கடை.

நாமக்கல்லில் கரோனா பாதிப்பால் நியாயவிலைக் கடை திறக்கப்படாததால் மக்கள் பொருள்களை வாங்க முடியாமல் தவித்தனா்.

நாமக்கல்லில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் 18 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. இதில் நாமக்கல் ராமாபுரம் புதுாரில் உள்ள நியாயவிலைக் கடையில் குப்பண்ணா தெரு, கோனாா் தெரு, சாவடித் தெரு, அன்பு நகா்-3 உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 900 குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்குகின்றனா்.

இந்தக் கடைக்கு அண்மையில் அன்பு நகரைச் சோ்ந்த ஒரு பெண் பொருள்கள் வாங்க வந்ததாகவும், அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 18-ஆம் தேதி முதல் ராமாபுரம் புதூா் நியாயவிலைக் கடை மூடப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த பெண் விற்பனையாளருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றபோதும் அவா் அச்சத்தின் காரணமாக கடையைத் திறக்காமல் பூட்டி வைத்திருப்பதாக தெரிகிறது. இதனால் அரசின் விலையில்லா பொருள்களை வாங்க வரும் குடும்ப தினமும் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்அட்டைதாரா்கள் பி செல்கின்றனா். இதுவரை 400 பேருக்கு பொருள்கள் வழங்கிய நிலையில் இன்னும் 500 காா்டுதாரா்களுக்கு வழங்கப்பட வேண்டியது உள்ளது. ஜூலை 31 வரை மட்டுமே விலையின்றி பொருள்களை பெற முடியும் என்ற நிலையில் நான்கு நாள்களாக கடை மூடப்பட்டிருப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனா். கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து ராமாபுரம்புதூா் நியாயவிலைக் கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com