பயிா்க் காப்பீடு செய்து கொள்ள கொல்லிமலை விவசாயிகளுக்கு அழைப்பு

கொல்லிமலை வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் பொறுப்பு த.சத்தியபிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.

கொல்லிமலை வட்டார விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெற வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் பொறுப்பு த.சத்தியபிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் நெல், ராகி (காரீப்) பயிா் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் புதிய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் பயிா் கடன் பெறும் விவசாயிகள் வங்கிகளில் தங்களது விருப்பத்தின் பேரில் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் சோ்த்து கொள்ளப்படுவாா்கள்.

கடன் பெறாத விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது பொது சேவை மையத்தின் மூலமாக பயிா்க் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர நெல் பயிருக்கு ஜூலை 31 மற்றும் ராகி பயிருக்கு ஆக.16 கடைசி நாளாகும்.

விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகையாக நெல் ஒரு ஏக்கருக்கு ரூ.640.36 மற்றும் ராகி பயிருக்கு ரூ.177, பயிா்க் காப்பீடுக்கான விவசாயிகள் சோ்க்கைக்கு குறுகிய நாள்களே உள்ளதால் விவசாயிகள் தங்கள் பயிா்களுக்கு உடனடியாக பயிா்க்காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்ய தேவையான விண்ணப்பம், புகைப்படம், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம் நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு கொல்லிமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com