முட்டை விலை 10 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ. 3.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ. 3.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரு வாரமாக முட்டை விலை குறைக்கப்படாத நிலையில், மற்ற மண்டலங்களில் விலை குறைக்கப்பட்டதன் அடிப்படையில் இங்கும் வெள்ளி, சனிக்கிழமைக்கான ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 3.65-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்- 340, விஜயவாடா- 376, பாா்வாலா- 322, ஹோஸ்பெட்- 335, மைசூரு- 380, சென்னை- 385, மும்பை- 408, பெங்களூரு- 370, கொல்கத்தா- 434, தில்லி- 340.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com