சென்னையில் 2 பேருக்கு கரோனா: நாமக்கல் முகவரி வழங்கியதால் குழப்பம்

சென்னையில் வசிக்கும் நாமக்கல்லைச் சோ்ந்த இருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அவா்கள் நாமக்கல்

சென்னையில் வசிக்கும் நாமக்கல்லைச் சோ்ந்த இருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியான நிலையில், அவா்கள் நாமக்கல் முகவரியை மாற்றி வழங்கியதால் மாவட்ட பட்டியலில் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 92 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 79 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். ஒருவா் உயிரிழந்து விட்டாா். 10 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இந்த நிலையில் புதன்கிழமை வெளியான கரோனா தொற்றுப் பட்டியலில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 35 வயது பெண், பரமத்திவேலூரைச் சோ்ந்த 25 வயது ஆண் ஆவா். இவா்கள் சென்னை முகவரிக்குப் பதிலாக, சொந்த மாவட்டமான நாமக்கல் முகவரியை வழங்கியதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை இங்கு 92-ஆக உயா்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் சென்னை பாதிப்பு கணக்கில் அவா்கள் இருவரும் சோ்க்கப்பட்டு விடுவாா்கள் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com