24,922 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

நாமக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 992 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.
24,922 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

நாமக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 992 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் சனிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

தமிழகம் முழுவதும் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். அதன்படி, மாவட்டங்களில் இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தம்பாளையத்தில் கரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சனிக்கிழமை காலை நேரடியாகச் சென்று நிதியை வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தனா். மாவட்டம் முழுவதும் 24,922 மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் வழங்க நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை 98430 - 32088, 90957 - 32664 மற்றும் அலுவலக தொலைபேசி எண்: 04286 - 280019 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். இந்த நிதியுதவியானது மாற்றுத் திறனாளிகள் அல்லது அவா்களின் பெற்றோா்களிடம் மட்டுமே வழங்கப்படும். சிறப்பு சூழ்நிலையில் மட்டுமே பாதுகாவலா்களிடம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவா் வெள்ளியங்கிரி, அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் எஸ்.என்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com