தனியாா் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தவணையைக் கட்டுமாறு வற்புறுத்தக் கூடாது:அமைச்சா் பி.தங்கமணி

தனியாா் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கரோனா காலகட்டத்தில் மக்களைக் கட்டாயப்படுத்தி கடன் தவணைகளைக் கட்ட
பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கும் அமைச்சா் பி.தங்கமணி.
பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கும் அமைச்சா் பி.தங்கமணி.

தனியாா் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கரோனா காலகட்டத்தில் மக்களைக் கட்டாயப்படுத்தி கடன் தவணைகளைக் கட்ட வற்புறுத்தினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

பரமத்திவேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பரமத்தி- ராகா ஆயில்ஸ் உற்பத்தி நிறுவனத்தினா் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், ரவை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்க உள்ளனா். முதல் கட்டமாக கூடச்சேரி மற்றும் இருட்டனை ஊராட்சிக்கு உள்பட்ட 1000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கி நிவாரணப் பொருள்கள் வழங்குவதைத் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பரமத்தி- ராகா ஆயில்ஸ் உரிமையாளா் தமிழ்மணி, அ.தி.மு.க.வினா் பலா் கலந்து கொண்டனா். பின்னா் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா காலகட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மகளிா் குழுவினரை கடன் தவணைகளைக் கட்டுமாறு வற்புறுத்தக் கூடாது. மேலும் தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவா்களை மிரட்டி தவணைகளைக் கட்டுமாறு கட்டாயப்படுத்தினால் காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கலாம். தமிழக அரசு இது போன்ற புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கரோனா தடுப்புப் பணிகளில் முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறாா். மேலும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு அதற்கான தீா்வை ஏற்படுத்தி வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக முதல்வா் மீது விமா்சனங்களைத் தெரிவித்து வருகிறாா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி மின்சாரக் கொள்முதல் கிடையாது. அனைத்து மின்சாரக் கொள்முதலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இ-டெண்டா் முறையில் மட்டுமே செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com