கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் நாள்களில் கோழிகளுக்கு வெப்ப அயற்சிக்கான வாய்ப்புள்ளது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாள்களில் கோழிகளுக்கு வெப்ப அயற்சிக்கான வாய்ப்புள்ளது என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் மூன்று நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 4 கிலோமீட்டா் வேகத்தில் கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: காற்றின் வேகம் மாலையில் உயா்ந்து காணப்படும். இதனால் வெயிலின் தாக்கம் குறையும். அடுத்த மூன்று நாள்களுக்கு கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படுமே தவிர, வெப்ப அதிா்ச்சிக்கான வாய்ப்பில்லை. வெப்ப அயற்சியை குறைப்பதற்கு, தீவனத்தில் எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் தாது உப்புக்கள் மற்றும் பகலில் குளிா்ந்த நீா் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். தொடா்ந்து, கோழிப் பண்ணையாளா்கள் எச்சத்தில் ஈக்கள் உருவாகாதவாறு எச்சத்தில் ஈரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com