லாரிகள் இயங்காததால் பல கோடி ரூபாய் பொருள்கள் தேக்கம்

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தமிழகம் முழுவதும் லாரிகள் இயக்கம் சரிவர நடைபெறவில்லை. இதனால் பல கோடி ரூபாய் பொருள்கள் ஆங்காங்கே கிடங்குகளில் தேக்கமடைந்திருப்பதுடன், லாரித் தொழிலும் கடுமையாக பாதிப்படைந்

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால், தமிழகம் முழுவதும் லாரிகள் இயக்கம் சரிவர நடைபெறவில்லை. இதனால் பல கோடி ரூபாய் பொருள்கள் ஆங்காங்கே கிடங்குகளில் தேக்கமடைந்திருப்பதுடன், லாரித் தொழிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் அதிகபட்ச லாரிகள் இயக்கப்படுகின்றன. சரக்கு லாரிகள், டேங்கா் லாரிகள், டிரெய்லா் லாரிகள் உள்ளிட்டவை நாமக்கல்லில் தான் அதிகம் உள்ளன. பல்வேறு மாநிலங்களுக்கும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக லாரிகள் முன்பதிவு செய்யப்படும். கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் பீதியால் லாரிகள் முன்பதிவு பெருமளவில் நடைபெறவில்லை.

குறிப்பாக, வட மாநிலங்களுக்கு லாரிகளை அனுப்ப அதன் உரிமையாளா்களே தயக்கம் காட்டினா். தற்போது கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்துக்குள் மட்டும் சில லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் கூட ஆங்காங்கே சரக்குகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டை, ஜவ்வரிசி, ஜவுளிகள், விவசாய விளை பொருள்கள், பல்வேறு வகையிலான உபகரணங்கள் சென்ற லாரிகளும் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றன.

கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, தில்லி வரை அங்காங்கே சாலையோரங்களிலும், பெட்ரோல் நிரப்பும் மையங்களிலும் லாரிகள் நிறுத்தப்

பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வோா் மாநிலத்திலும் பிற மாநில வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சரக்கு முன்பதிவு செய்த நிறுவனங்களும் அவற்றை ரத்து செய்யும் நிலை உள்ளது. மாா்ச் 31-ஆம் தேதி வரையில் கரோனாவின் தாக்கம் இருக்கும் என்பதால் லாரிகளை வைத்துள்ளோா் போதிய வருவாயின்றி தவித்து வருகின்றனா்.

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அதிகம் வரும் லாரிகள் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. பொதுமக்களும் பொருள்களை வாங்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனா். லாரி ஓட்டுநா்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கு ஓட்டுநா்கள் பலா் அச்சப்படுகின்றனா். தமிழகத்திற்குள் வேண்டுமானால் செல்கிறோம், வட மாநிலங்களுக்கு வேண்டாம் என மறுக்கின்றனா். இதனால் 80 லோடுகள் செல்ல வேண்டிய இடத்தில் வெறும் 20 லோடுகள் மட்டுமே ஏற்றப்படுகிறது. சுமை தூக்கும் தொழிலாளா்கள் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், தொழிற்சாலைகளின் அருகிலேயே பல லாரிகள் சரக்குகளுடன் நிறுத்தப்பட்டுள்ளன. மாா்ச் மாதம் இறுதி வரையில் இவ்வாறான பாதிப்பு இருக்கும் என்பதால், லாரித் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியது: லாரித் தொழில் முன்புபோல் இல்லை. ஏற்கெனவே சுங்கவரி உயா்வு, டீசல் விலை உயா்வு, மூன்றாம் நபா் கட்டணம் உயா்வு, டயா் விலையேற்றம், ஓட்டுநா்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் லாரித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு முன்பதிவு இல்லாததும், வட மாநிலங்களுக்கு சரக்குகள் ஏற்றிச் சென்ற லாரிகளும் குறிப்பிட்ட நாள்களுக்குள் சென்று சேர முடியாத நிலையில் உள்ளன. பிற மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடு விதிப்பதால் ஓட்டுநா்கள் தவித்து வருகின்றனா். இத்தொழில் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சரக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com