நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு

பிரதமா் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 22-ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட கிளை முடிவு செய்துள்ளது.

பிரதமா் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 22-ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட கிளை முடிவு செய்துள்ளது.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அச்சங்க கிளையின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவா் எஸ். பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா்வெள்ளையன், பொருளாளா் எஸ்.கே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், இந்திய அளவில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளை, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டுகிறது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கையின் தொடா்ச்சியாக பிரதமா் மோடி அறிவித்தபடி, வரும் 22-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் ஒத்திகை ஊரடங்கு உத்தரவு அடிப்படையில், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இனிவரும் காலங்களிலும் அரசு எடுக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பக்கபலமாக நிற்கும். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சியாக வணிக வளாகங்கள், பெரிய கடைகள் மற்றும் வா்த்தக மையங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த வா்த்தக மையங்களில் வா்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் அங்கமாக விளங்கும் வணிகா்களின் பொருளாதார இழப்பு, பணியாளா்களின் சுமை, ஜி.எஸ்.டி. வரிச்சுமை, வங்கிக் கடன் ஈ.எம்.ஐ. சுமை, வங்கி காசோலை நிலுவை, சொத்து வரி, குடிநீா் வரி, வருமான வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துவதில் போதிய கால அவகாச உதவியை வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த வேளையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வணிகா்க சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com