நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெப்பநிலை அளவீடு கருவியால் பக்தா்களுக்கு பரிசோதனை

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெப்பநிலை அறியும் கருவியைக் கொண்டு பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் பெண் பக்தா் ஒருவரை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் பெண் பக்தா் ஒருவரை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளா்.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெப்பநிலை அறியும் கருவியைக் கொண்டு பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஜவுளி நிறுவனங்கள், வாரச் சந்தைகள் உள்ளிட்டவற்றை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நரசிம்மா் மற்றும் அரங்கநாதா் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.

ஆஞ்சநேயா் கோயிலுக்கு மட்டும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடல் வெப்பநிலையை அறியும் வகையிலான தொ்மல் ஸ்கேனா் கருவி கொண்டு சுகாதாரப் பணியாளா்கள் மூலம் தொடா் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பக்தா்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரையில் கோயிலுக்கு வருவதைத் தவிா்ப்பது நல்லது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com