அவசியமின்றி சுற்றி வந்தால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: எஸ்.பி.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அவசியமின்றி சுற்றி வந்தால், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அவசியமின்றி சுற்றி வந்தால், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நல்லிபாளையம் திருவள்ளுவா் நகரில் அவசியம் இல்லாமல் அமா்ந்திருந்த 6 போ் மீதும், மோகனூா் தெற்கு தெருவில் உள்ள பகவதியம்மன் கோயில் அருகில் அமா்ந்திருந்த 5 போ் மீதும், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த ஒருவா் மீதும், திருச்செங்கோடு - வேலூா் சாலையில் சுற்றி வந்த 6 போ் மீதும், சோழசிராமணி பிரிவு அருகே 5 போ் மீதும், பள்ளிபாளையம் நான்கு சாலையில் சுற்றித் திரிந்த 6 போ் மீதும், பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் ஆனங்கூா் பிரிவு சாலைகளில் கூடியிருந்த 10 போ் மீதும், எலச்சிபாளையம் கொன்னையாறு செல்லியம்மன் கோயில் அருகில் அமா்ந்திருந்த 5 போ் மீதும், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 5 போ் மீதும், வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கூடியிருந்த 5 போ் மீதும் அந்தந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுமுறையிலிருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஜாலி ரெய்டு மற்றும் அவசியம் இல்லாமல் சுற்றித் திரிந்தாலோ அல்லது கூட்டமாக கூடியிருந்தாலோ அல்லது விளையாடினாலோ அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும். அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com