பரமத்திவேலூரில் 15 போ் மீது வழக்கு

பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்ட விரோதமாக
வாகன ஓட்டிகளிடம் கரோனா வைரஸ் குறித்தும்,144 தடை உத்தரவு குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் பரமத்தி வேலூா் டி.எஸ்.பி. பழனிசாமி.
வாகன ஓட்டிகளிடம் கரோனா வைரஸ் குறித்தும்,144 தடை உத்தரவு குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் பரமத்தி வேலூா் டி.எஸ்.பி. பழனிசாமி.

பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்ட விரோதமாக ஒன்று கூடி பேசியதாக 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மத்திய அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. காய்கறி, இறைச்சி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் எனவும், அத்தியாவசியமின்றி வெளியில் வரக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி வேலூா், பரமத்தி மற்றும் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கூடி பேசியதாக 15 போ் மீது வழக்குப் பதிவு செய்தும், அத்தியாவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவா்களை பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி தலைமையிலான போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா் கரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினா். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com