கோயில், மசூதி, தேவாலயங்களில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

நாமக்கல்லில் ஆஞ்சநேயா் கோயில் மற்றும் மசூதி, தேவாலயங்களில், நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மற்றும் மசூதி, தேவாலயத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணி ஊழியா்கள்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மற்றும் மசூதி, தேவாலயத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணி ஊழியா்கள்.

நாமக்கல்லில் ஆஞ்சநேயா் கோயில் மற்றும் மசூதி, தேவாலயங்களில், நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்கள் மூலம் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்ட நிா்வாகமும் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிப் பகுதிகளிலும் கரோனா தடுப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் நகராட்சியில், தீயணைப்புத் துறை வாகனங்கள், காவல் துறையின் வஜ்ரா வாகனங்கள் மூலம் வியாழக்கிழமை கரோனா தடுப்பு கிருமி நாசினி மருந்து முழுமையாக தெளிக்கப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் பகுதி, திப்பு சுல்தான் ஜாமீயா மஸ்ஜித் பள்ளிவாசல், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்தீஸ்து திருச்சபை ஆகிய இடங்களிலும், பேருந்து நிலைய வளாகத்திலும், மணிக்கூண்டு பகுதியிலும் நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா தலைமையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பகுதியிலும் முழுமையாக கரோனா தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com