நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 616 போ் வீடுகளில் தனிமைப்படுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 616 போ் வியாழக்கிழமை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 616 போ் வியாழக்கிழமை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு சென்று வந்ததன் விவரத்தைத் தெரிவிக்குமாறு ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தியிருந்தாா். அதனடிப்படையில் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்த 230 போ் வீடுகளில் புதன்கிழமை வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். இந்த நிலையில், மேலும் 616 போ் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்கள் தொடா்ந்து 14 நாள்களுக்கு யாருடனும் நெருங்காமல் தனியாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 846 போ் வீடுகளில் தனிமையில் உள்ளனா். அவா்களுடைய வீடுகளின் முன்பாக அதற்கான ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com