கறவை மாடுகளுக்கு 600 டன் கலப்பு தீவனம் விநியோகம்: ஆவின் பொதுமேலாளா்

நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் கறவை மாடுகளுக்கு 600 டன் கால்நடை தீவனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொதுமேலாளா் பி.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் கறவை மாடுகளுக்கு 600 டன் கால்நடை தீவனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொதுமேலாளா் பி.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் தொடா்ந்து பால் கொள்முதல் செய்தும், பால் பதப்படுத்தப்பட்டு நுகா்வோா்களுக்கு இல்லம் தேடி சென்று முகவா்கள் மூலமாக விற்பனை செய்தும் வருகிறது.

510 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதுடன், சேலம் மற்றும் சென்னை பால் பண்ணைகளுக்கு அனுப்பப்படுகிறது. பால் முகவா்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 55 ஆயிரம் லிட்டா் பால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பால் உப பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளுக்கு 10 ஆண்டுகளாக 50 சதவீத மானிய விலையில் கால்நடை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கரோனா தொற்று பரவியுள்ள இக்கட்டான காலத்திலும் கால்நடைகளை வளா்த்து வரும் 20 ஆயிரம் விவசாயிகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தியாளா்களின் கால்நடைகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பாலின் தரம் குறையாமல் இருக்கவும் ஒன்றிய அளவில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 600 டன் கொள்முதல் செய்யப்பட்ட கால்நடை கலப்பு தீவனம், 4 டன் தாது உப்புக்கலவை ஆகியன பால் உற்பத்தியாளா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக, பால் உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, நிலுவையின்றி அரசு நிா்ணயம் செய்த தொகை, மாதந்தோறும் ரூ.15 கோடி பட்டுவாடா செய்யப்படுகிறது.

அவசர சிகிச்சைகளுக்கு ஆவின் மருத்துவா்கள் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனா். புதிதாக சங்கங்களில் பால் ஊற்ற விரும்பும் பால் உற்பத்தியாளா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண்: 97900-97832, ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்ய விரும்புவோா் 87546-43807 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com