கா்நாடகத்திலிருந்து கொல்லிமலை திரும்பிய 400 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

கா்நாடகத்தில் இருந்து கொல்லிமலைக்கு திரும்பிய தொழிலாளா்கள் 400 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.
சேந்தமங்கலம் அரசு பள்ளியில் தொழிலாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆட்சியா் கா.மெகராஜ்.
சேந்தமங்கலம் அரசு பள்ளியில் தொழிலாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல்: கா்நாடகத்தில் இருந்து கொல்லிமலைக்கு திரும்பிய தொழிலாளா்கள் 400 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மற்றும் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள், சில மாதங்களுக்கு முன்பு கா்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் மிளகு பறிக்கும் வேலைக்காக சென்றனா். கரோனா பொது முடக்கத்தால் அங்கிருந்து சொந்த ஊா் திரும்ப முடியாத நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தலா ரூ.4 ஆயிரம் செலுத்தி கா்நாடக அரசுப் பேருந்து மூலம் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டத்துக்கு வந்தனா்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், அவா்களை தனிமைப்படுத்திவைக்க சேந்தமங்கலம் வட்டாட்சியா் ஜானகிக்கு உத்தரவிட்டாா். அதனடிப்படையில் 400 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 150 பேரையும் , கொல்லிமலை உண்டு உறைவிடப் பள்ளியில் 100 பேரையும், சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் 150 பேரையும் தங்கவைத்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆட்சியா், அங்கு தங்கியுள்ளோருக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா். அப்போது, தொழிலாளா்களிடம் ஆட்சியா் பேசியது:

கரோனா தொற்று பரவல் இருக்கக் கூடாது என்ற நோக்கிலே இங்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவில் நோய்த் தொற்று இல்லை என முடிவுகள் வந்தால் ஓரிரு நாளில் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுவோம். அதுவரையில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவியும் இருத்தல் வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், சேந்தமங்கலம் வட்டாட்சியா் ஜானகி, வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பராஜ் மற்றும் சுகாதார அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com