முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.3.40-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ.3.40-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 காசுகள் உயா்த்தப்பட்டு சனிக்கிழமைக்கான பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.40-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-320: விஜயவாடா-330, பாா்வாலா-290, ஹோஸ்பெட்-300, மைசூரு-341, சென்னை-365, மும்பை-355, பெங்களூரு-335, கொல்கத்தா-370, தில்லி-305.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ.83-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.128-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com