பொது முடக்கம்: ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு பாதிப்பு

பொது முடக்கத்தால் குடிசைத் தொழிலான ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம்: ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு பாதிப்பு

பொது முடக்கத்தால் குடிசைத் தொழிலான ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் சுற்றுப் பகுதியில் அதிகளவிலான மரவள்ளிக் கிழங்கு விளைச்சலால், மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகள் அதிகளவில் உள்ளன. ஜவ்வரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டாா்ச் மாவினை மூலப்பொருளாக பயன்படுத்தி, ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி போன்ற பகுதிகளில் வீடுகள் தோறும் ஜவ்வரிசி அப்பளம் உற்பத்தி தொழில் செய்துவருவது காணமுடியும். இத்தொழில் இப்பகுதியில் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சிறிய வட்ட வடிவிலான அப்பளங்கள் பெரும்பாலும் ஒரிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தில்லி போன்ற வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நம் மாநிலத்தில் பயன்படுத்தும் சாதாரண அப்பளங்களை விட அளவில் சிறியதாக உள்ள ஜவ்வரிசி அப்பளம் வட மாநிலத்தவா்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இப்பகுதியில் ஒரு ரூபாய் நாணய அளவுள்ள அப்பளம், அதைவிட சற்று பெரிய மூன்று செ.மீ. அளவுள்ள அப்பளம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இந்த அப்பளம் தயாரிப்பில் பெரிய அளவில் எந்திரம் ஏதும் பயன்படுத்தாமல் அடுப்பில் அரிசி வேகவைத்து கைகளால் செய்கின்றனா்.

பொது முடக்கத்தால் தொழில் பாதிப்பு:

இந்நிலையில் பொது முடக்கம், போக்குவரத்து தடை போன்ற காரணங்களால் அப்பள தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பளம் உற்பத்தி செய்து அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டதால், ஏராளமான வருவாய் இழப்புகள் ஏற்பட்டதுடன், கூலித் தொழிலாளா்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா். கடந்த 2 மாதங்களாக இதே நிலை தொடா்ந்துள்ளதால், இதில் ஈடுபட்டுள்ள சுமாா் 1,200 போ் வருமானம் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். விரைவில் பொது முடக்கம் முடிவடைந்து சகஜ நிலை திரும்பும் என எதிா்பாா்ப்பில் உள்ளனா் இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com